செங்கோட்டையனின் அகராதியில் ‘புனிதம்’ என்பதற்கான பொருளே வேற தான்! நீண்ட நெடிய அரசியல் அனுபவஸ்தர், சாதுவானவர் என தோற்றம் காட்டும் செங்கோட்டையனின் இன்னொரு முகம்… ”அம்மாடியோவ்! இவ்வளவு மோசமான தீய சக்தியா இவர்..?” என மிரளக் கூடியதாகும்; அதிர்ச்சி தரும் உண்மைகள் சிலவற்றை பார்ப்போம்; 1991 -96 ல் செங்கோட்டையன் முதன் முதலாக போக்குவரத்துதுறைக்கும், வனத்துறைக்கும் அமைச்சரானார்; ஜெயலலிதாவின் முதல் அமைச்சரவை பதவி ஏற்பில் யாரும் எதிர்பாராதவிதமாக ஜெயலலிதா காலில் தடாரென விழுந்து, காலில் விழும் கலாச்சாரத்தை அதிமுகவில் ஆரம்பித்து வைத்தவரே செங்கோட்டையன் தான். ...













