ஒரு மழை, வெள்ளம், புயல் வந்தால், நம் நவீன  சென்னையின் உண்மையான யோக்கியதை பல் இளித்து விடுகிறது! இந்தியாவின் முதன் முதல் மாநகராட்சி! கழிவு நீர் தங்குவதற்கே வாய்ப்பில்லாத அருமையான இயற்கை பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட சென்னை இத்தகு அவலங்களை சந்திக்க நேர்ந்தது ஏன்? ஒரு காலத்தில் லண்டனின் தேம்ஸ் நதியைப் போல ஓடிய கூவம், ஆரணியாறு -கொற்றலை, அடையாறு, பாலாறும், கோவலமும் வந்து சேரும் பக்கிங்காம்.. போன்ற பெரிய ஆறுகள்! ஓட்டேரி, விருகம்பாக்கம், மாம்பலம்..என 20 க்கும் மேற்பட்ட நீர்வழித் தடங்களைக் கொண்ட ...