’இப்படியும் ஒரு மனிதர் வாழ்ந்திருப்பாரா?’ என வியக்கத்தக்க வாழ்க்கை வாழ்ந்தவரே பாரதியார். பாரதியாரின் கவிதைகள் எவ்வளவு உன்னதமானவைகளோ, அதைக் காட்டிலும் அவர் வாழ்ந்த வாழ்க்கை மிகவும் உன்னதமானது; ஆச்சரியங்கள் நிறைந்தது, வசீகரமானது, பின்பற்றத்தக்கது; நினைவு நாள் என்பதற்காக பாரதியை எழுதவில்லை. நாளும் அவரை நினைவு கூர்கிறேன். பாரதி கவிதைகளையோ, அவரைப் பற்றிய வரலாற்று செய்திகளையோ நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாசித்து புத்துணர்ச்சி பெற்று என்னை புதுப்பித்துக் கொள்வேன். ஆயிரம் ஆண்டுக்கு ஒரு முறை தோன்றும் அபூர்வக் கவிஞன் பாரதி! எத்தனை முறை வாசித்தாலும், தெவிட்டாத ...














