தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி வேகம் எடுத்துள்ள நிலையில் காங்கிரஸ் செய்யப் போவது என்ன? தனித்து களம் கண்டு பாஜகவின் வாக்கு வங்கியை உயர்த்திக் கட்டும் துணிச்சல் அண்ணாமலைக்கு இருக்கும் போது, செல்வ பெருந்தகைக்கு இருக்க கூடாதா? காங்கிரசின் கடந்த காலம் சொல்லும் செய்தி என்ன? நிகழ்காலப் பயணம் என்ன..? காங்கிரஸ் கட்சியை வளர்ப்பது பற்றி அதன் தமிழகத் தலைவர் செல்வப் பெருந்தகை பேசினால், ‘அது திமுகவுக்கு எதிரான பேச்சோ..’ என்ற பதற்றம் ஏற்பட்டு விடுகிறது. அண்ணாமலைக்கு கிடைத்த அதிகாரமும், சுதந்திரமும் பாஜகவின் வளர்ச்சியை சாத்தியப்படுத்தி ...