முக்கிய சேவையான மருத்துவ துறையில் கூட ஒப்பந்தக் கூலிகளாகவே மருத்துவர்களும், செவிலியர்களும் பல்லாண்டுகள் வேலை வாங்கப்படுவது அரசு நிர்வாகத்தின் அராஜக போக்கை அம்பலப்படுத்துகிறது. மருத்துவத் துறையையே மரணப்படுக்கையில் கிடத்தியுள்ள தமிழக அரசின் அளப்பரிய சாதனைகள் குறித்த ஒரு அலசல்; கடந்த நான்கரை ஆண்டுகளில் தமிழகத்தில் மருத்துவர்களும், செவிலியர்களும் எத்தனை முறை தெருவில் இறங்கி போராடும் நிலைக்கு தள்ளப்பட்டனர் என்பதற்கு கணக்கு வழக்கே இல்லை. சுகாதாரத் துறையின் அடிநாதமாகத் திகழ்பவர்கள் செவிலியர்கள். உண்மையான சேவையை வழங்கியும் – பல்லாண்டுகளுக்கு பிறகும் – பணி நிரந்தரம் செய்யாமல் ...













