தமிழ்நாட்டில் மிகக் குறுகிய காலத்தில் எந்தப் பதவியிலும் இல்லாமலே அதிகம் சம்பாதித்த முதல் அரசியல்வாதி என்ற புகழ் அண்ணாமலையைத் தான் சாரும். சொத்துக்களை குவிக்க அண்ணாமலை கையாண்ட பாணி என்பது இது வரை தேசிய கட்சியின் தமிழக தலைவர்கள் யாருமே நினைத்துக் கூட பார்த்திராதது; திமுக ஆட்சியாளர்களின் ஊழல் முறைகேடுகள் தொடர்பாக அக்கினிப் பிழம்பு போல அண்ணாமலை மேடையிலும், ஊடகங்களிலும் பேசும் பேச்சுகள் புல்லரிக்க வைக்கும். அடடா! இவரல்லவா அநீதிகளை தட்டிக் கேட்கும் அருமைத் தலைவர் என பார்ப்பவர்களை பரவசப்படுத்தும். ஐபிஎஸ் அதிகாரியாக கர்நாடகாவில் ...