நமது நாட்டின் சோசலிசம், மதச்சார்பின்மை போன்ற வார்த்தைகளே இவர்களுக்கு இப்படி கசக்கிறது. நாட்டிற்கு பெருமை சேர்க்கும் இவற்றை முற்றாக ஒழித்துக் கட்டியே தீருவது என கங்கணம் கட்டுகின்றனர். ஆனால், உச்ச நீதிமன்றம் ‘இவற்றை தொடுவதற்கே அனுமதியில்லை’ என கறார் காட்டிய விதம் அபாரம்! முழு விபரங்கள்; நமது நாட்டை வழி நடத்தும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் சோசலிசம், மதச்சார்பின்மை ஆகிய வார்த்தைகளை நீக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் நேற்றைய நாள் (நவம்பர் 25, 2024) தள்ளுபடி செய்தது. முன்னாள் ராஜ்யசபா எம்பி ...