இயற்கை எழில் கொஞ்சும் இமயமலையின் லடாக் பகுதி இன்று கார்ப்பரேட் நிறுவனங்களின் வேட்டைக்காடாகி வருகிறது. இது சுற்றுச் சூழலில் பெரும் ஆபத்துகளை ஏற்படுத்தும். இறை சக்தியின் உறைவிடமான இயற்கையை காப்பாற்றுவதற்கான காந்திய வழியிலான சோனம் வாங்சுக்கின் போராட்டங்கள் வெற்றி பெறுமா? சோனம் வாங்சுக் என்பவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றிய ஒரு பொறியாளர் மற்றும் உயர் அதிகாரி. கார்க்கில் போரில் இவரின் அர்ப்பணிப்பை பாராட்டி முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இவருக்கு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான மகாவீர் சக்ரா விருதை வழங்கியுள்ளார். யதார்த்ததில் சோனம் வாங்சுக் ...