சமகால அரசியல்,சமூகம் குறித்து ஒரு தெளிந்த பார்வையுடன் எடுக்கப்பட்டுள்ள படம் தான் ஜன கண மன! காவல் துறையின் என்கெண்டர், கல்வி நிறுவனங்களில் நடக்கும் பாகுபாடுகள், ஊடக மற்றும் சோஷியல் மீடியாக்களின் போக்குகள், அனல் பறக்கும் நீதிமன்ற வாதங்கள் என்பதாக வந்திருக்கும் தரமான படம்! “என் மாணவர்கள் தான் என் அடையாளம்” என்று அர்ப்பணிப்போடு கற்பிக்கும் பல்கலைக்கழக பேராசிரியையான சபா மரியம் தீ வைத்துக் கொளுத்திக் கொல்லப்படுகிறார்! பேராசிரியையின் எரிக்கப்பட்ட உடலை காவல்துறை கண்டுபிடிக்கிறது. அன்று இரவே, பேராசிரியை வன்புணர்வு செய்து கொளுத்தப்பட்டதாக எல்லா ...