கேட்கவே பிரமிப்பாக உள்ளது…! இது சாதாரணத் தொகையல்ல! அடுத்த 10 ஆண்டுகளில் ஜப்பானிய நிறுவனங்கள் இந்தியாவில் ரூ.6 லட்சம் கோடியை முதலீடு செய்யுமாம்…! இது தொடர்பான பத்திரிகை செய்திகளையும், வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையையும் பார்க்கும் போது, இந்தியாவில் அதானி, அம்பானிக்கு அடுத்தபடியாக ஜப்பான் கோலோச்ச உள்ளதோ..என நினைக்கத் தோன்றுகிறது. முதலில்  பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபாவும்  கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தங்கள் 13 ம் இந்திய அரசுக்கும் – ஜப்பானிய அரசுக்குமானது தான் என்று இயல்பாக நான் நம்பிவிட்டேன். பிறகு அதில் ...