ஜல்லிக்கட்டு போராட்டத்தை 2017க்கு முன்பு, பின்பு என இரு வேறாக அணுக வேண்டியுள்ளது. முன்பெல்லாம் மண்ணின் மக்கள் விழாவாக -அந்தந்த ஊர் சம்பந்தப்பட்ட அளவில் – நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு, தற்போது அரசியல், அதிகாரம், பெருவணிகம்.. ஆகியவற்றின் ஆதிக்கத்தில் மண்ணின் மக்களை அந்நியப்படுத்தியுள்ளது; தமிழர்களின் வீர விளையாட்டு என பெரிய ‘ஹைப்’ தரப்பட்டு, மிகப் பெரிய அளவில் சென்னை மெரீனா தொடங்கி தமிழகம் தழுவிய போராட்டங்கள் நடத்தி, ஜல்லிக் கட்டுக்கு ஒரு மவுசு வந்த பிறகு அரசியல், அதிகாரம், வணிகம் ஆகியவை சம்பந்தப்பட்ட ஆதிக்க விளையாட்டாக ...