கள்ளக்குறிச்சி வழக்கு காவல்துறை விசாரணையில் உள்ளது! ஜிப்மர் கொடுத்தது ஒரு மருத்துவ ஒபினியன் தானே! அதை பொதுவெளியில் வைக்க மறுத்து, தன்னிச்சையாக கருத்துரைப்பதா? இது விசாரணையின் போக்கை கடுமையாக பாதிக்குமே! நீதிமன்றத்தின் மாண்பையே கேள்விக்குள்ளாக்கி விட்டார் நீதிபதி! ‘ஆட்சியாளர்கள் தப்பு செய்தாலும், காவல்துறை தப்பு செய்தாலும் கூட கடைகோடி மனிதனின் கடைசி புகலிடமாக விளங்கி வருவது நீதித் துறை தான்! கோடானு கோடி மக்களின் அந்த மகத்தான நம்பிக்கையை ஒரு போதும் சீர்குலைந்து விடக் கூடாது’ என்பதே நம் ஆதங்கம்! கள்ளக் குறிச்சி வழக்கில் ...