”வைக்கம் போராட்டத்திற்கும் பெரியாருக்கும் பெரிசா ஒன்னும் சம்பந்தமில்லை” என ஆர்.எஸ்.எஸ் தூதர்கள் அடிக்கடி பேசி வந்தனர். உண்மை தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் வகையில் வைக்கம் போராட்டத்தின் நூறாம் ஆண்டு நிகழ்வுகள் நடந்து கொண்டுள்ளன! வைக்கத்தில் பெரியாரின் உண்மையான பங்களிப்பு என்ன? ”வைக்கம் போராட்டத்திற்கும், பெரியாருக்கும் பெரிசா ஒன்னும் சம்பந்தமே இல்லை. அதில் கைதான பலரில் பெரியாரும் ஒருவர். அவ்வளவு தான். அக்காலத்திய நாளிதழ் ஆவணங்களில் அனேகமாக எங்குமே ஈ.வே.ராவின் பெயர் காணப்படவில்லை.. டி.கே. மாதவன் போன்றவர்களின் வரலாறுகளிலும், நினைவுகளிலும் கூட ஈ.வெ.ராவின் பெயர் தனியாக ...