ஆந்திராவில் நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் நடக்கிறது. ஜெகன்மோகனின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி மீதான கோபத் தீ ஜெகத் ஜோதியாக கொழுந்துவிட்டு எரிகிறது. மீண்டும், சந்திரபாபு நாயுடுவுக்கு வாய்ப்பு இருக்கிறதா? காங்கிரஸ் தலை தூக்க வாய்ப்புள்ளதா..? ஒரு அலசல்; தனது 32 வது வயதில் தான் காங்கிரஸ் கட்சியிலேயே சேர்ந்தார் ஜெகன் மோகன் ரெட்டி. அவர் கட்சியில் சேர்ந்த ஐந்தாண்டுகளிலேயே அவரது தந்தை ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் இறந்து விட, தன்னை முதல்வராக்க காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கடி தந்தார். ஆனால், காங்கிரஸின் டெல்லித் ...