20 ஆம் நூற்றாண்டு தமிழ் எழுத்தாளர்களில் மாபெரும் ஆளுமையாகத் திகழ்ந்தவர் ஜெயகாந்தன்! அவரது சிறுகதைகளும், நாவல்களும் தமிழ் சமூகத்தில் பெரும் அதிர்வுகளை உருவாக்கியவை! அவரது படைப்புகள் பலரது வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை உருவாக்கியவை! ஜெயகாந்தன் படைப்புகள் பல இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளன! ஆங்கில மொழியிலும், ருஷ்ய மொழியிலும் கூட மொழி பெயர்க்கப்பட்டு வரவேற்பை பெற்றுள்ளன! இந்திய அரசின் மிக உயர்ந்த இலக்கிய விருதான ஞானபீட விருதை பெற்றவர் ஜெயகாந்தன். சாகித்திய அகாதமி விருதும் பெற்றவர்.ரஷ்ய அரசின் மிக உயர்ந்த இலக்கிய விருதும் ...

ஜெயகாந்தனை நேசிக்கும் தீவிர வாசகப் பரப்புக்காக இரு நூல்கள் வெளி வந்துள்ளன. ஜெயகாந்தனை குறித்து எவ்வளவு வாசித்தாலும், பேசினாலும் திகட்டுவதே இல்லை! இரண்டு நூல்களையும் படைத்தவர், ஜெயகாந்தனைக் குறித்து உள்ளும், புறமும் நன்கறிந்த எழில்முத்து. அறியப்படாத கூடுதல் தகவல்கள்! நூலாசிரியர் எழில்முத்து மறைந்த புலவர் கோவேந்தனின் மகன்! கோவேந்தன் தமிழ் கூறும் நல்லுலகு அறிந்த நல்ல கவிஞர், கட்டுரையாளர், மொழிப் பெயர்ப்பாளரும் கூட. அது மட்டுமல்ல, நூலாசிரியரின் மாமனார் எழுத்தாளர் தேவபாரதியும் ஜெயகாந்தனின் நெருங்கிய மிக நெருங்கிய ஆரம்ப கால சகா தான்! நூலாசிரியர் ...