குள்ளநரிக் கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டு, அதில் வெல்லற்கரிய சிங்கம் போல தோற்றம் காட்டிய ஜெயலலிதாவை எப்படியெல்லாம் திட்டம் போட்டு தீர்வை நோக்கி நகர்த்தியுள்ளனர், அவரது கூட்டாளிகள்! அதிர வைக்கும் உண்மைகளை தோலுரித்து காட்டிய நேர்மையான நீதிபதி ஆறுமுகசாமிக்கு சல்யூட் ! மிக நேர்மையோடும், சமரசமின்றியும், உண்மைக்கான தேடுதலைக் கொண்டும் நீதிபதி ஆறுமுகசாமி செயல்பட்டார் என்பதை அவரது விசாரணை போக்கில் இருந்தே, அப்போதே நாம் யூகித்தோம்! இந்த உண்மை அவரது அறிக்கையில் ஒளி வீசுகிறது. அவரது நேர்மையான விசாரணை அணுகுமுறையை அதிமுக ஆட்சியாளர்களே விரும்பவில்லை. ஆகவே ...