ரஜினிகாந்த் ஒரு நிலையில்லாத மனிதர். அரசியலில் ஆர்வம் இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்குவதும், பிறகு ஆர்வமற்றவராக கடந்து போவதுமாக இருந்ததால், ‘ரஜினி அரசியலுக்கு வரமாட்டார்’ என துல்லியமாக கணித்த சோ அவர்கள், அஜித்தை அரசியலில் இறக்கிவிட முயற்சித்தார், ஜெயலலிதா சம்மதத்துடன்: நடிகர் ரஜினிகாந்த் 30 வருடங்களாக அரசியலுக்கு வருவதா? வேண்டாமா? என முடிவெடுக்க இயலாமல் தடுமாறிய வண்ணம் இருந்துவிட்டு, தற்போது விஜய் முதல்வரானவுடன் விசனப்படுகிறார்! அதே சமயம் நடிகர் அஜித் அவர்கள், தன்னைத் தேடி வலிந்து வந்த வாய்ப்பை எந்தச் சிறு சலனமும் இன்றி ...