வானொலியால் வளர்ந்த தலைமுறைகள் இன்றும் சொல்வர், வானொலியின் பெருமைகளை! இன்றும் உலக நாடுகள் அனைத்திலும் வானொலிச் சேவைகள் மக்கள் வாழ்வோடு பின்னிப் பிணைந்துள்ளன. சமூக வானொலிகள் சகாப்தங்களை படைத்து வருகின்றன. வானொலிச் சேவைகளின் பல பரிமாணங்களை சொல்கிறார், ஜெய்.சக்திவேல்; சென்னைப் பல்கலைக்கழகத்தில் தான், ஆசியாவிலேயே ஜப்பானுக்கு அடுத்து இதழியல் படிப்பு இரண்டாவதாக ஆரம்பிக்கப்பட்டது. அங்கு படித்த, தங்க. ஜெய் சக்திவேல், சில காலம் பிபிசியில் பணியாற்றி, சென்னைப் பல்கலைக்கழகத்திலேயே துணைப் பேராசிரியராக பணிபுரிகிறார். இவர் வானொலி குறித்து பல்வேறு நூல்களை எழுதி தொகுத்துள்ளார். இந்த ...













