வரலாற்றில் இப்படி ஒரு முன் உதாரணமே கிடையாது – ஒரு நாட்டு அதிபர் அவமானப்பட்டதற்கு! அராஜகம், அடாவடித்தனம், திமிர்த்தனம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த உருவமாக டிரம்ப் இந்த உரையாடலில் வெளிப்பட்டார். ‘நம்பியவர்களை நட்டாற்றில் விடுவது, தன்னலம் மட்டுமே பிரதானம்’ என்பதே டிரம்பின் தாரக மந்திரமோ..! அழைக்கப்பட்ட நாடு, ‘வெறும் மூன்றரை கோடி மக்களை கொண்ட சுண்டைக்கா நாடு தானே’ என்ற எண்ணமா? ‘நம்ம உதவியைக் கொண்டு தானே இத்தனை நாள் தாக்கு பிடித்தார்கள்.. எனவே, ஏன் நமக்கு கூழைக் கும்பிடு போட வேண்டியது தானே’ என்ற ...