தில்லுமுல்லுகளின் வழியே ஒரு ஒற்றை மனிதன் இந்திய மக்களின் தேர்தல் தீர்ப்பையே திருத்தி எழுதி, ஜனநாயகத்திற்கே சவக்குழி தோண்டுகிறார். அதிகாரமிக்க பதவியில் பாரபட்சமாக நடப்பதையே தன் பண்பாகக் கொண்டுள்ள தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்ய எதிர்கட்சி எம்.பிக்கள் அணி திரண்டுள்ளனர்; இந்திய அரசியல் வரலாற்றில் இன்று குறிப்பிடத்தக்க நாளாகும்.இன்றைய தினத்தில் இந்திய ஜனநாயகத்திற்கே மிகப் பெரிய அச்சுறுத்தலாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் திகழ்கிறார். சுதந்திர இந்தியாவில் தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி  நாடாளுமன்றத்தில் இன்று  நோட்டீஸ் தாக்கல் செய்யப்பட்டுள்ளதானது ...