மதுரை மக்கள் மனஉறுதி குலையாதவர்கள்! அரசியல் தெளிவு மிகப் பெற்றவர்கள். போராடுவதில் சளைக்காதவர்கள், உயிருக்கும் அஞ்சாதவர்கள்…! உண்மையாகவே டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்யப்படுவது வரை ஓயமாட்டார்கள்.. என்பதை மத்திய ஆட்சியினர் உணர்ந்து கொள்ள இதுவே சாட்சியாகும்; பாஜக தலைவர்கள் மத்திய சுரங்கத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்திக்க அரிட்டாபட்டி பகுதியில் போராடும் மக்கள் பிரதிநிதிகள் சிலரை பாஜக தலைவர்கள் டெல்லிக்கு அழைத்துச் சென்றனர். இதையடுத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறும் ...