தமிழின் முதல் சமூக நாடகமாகவும், திரைப்படமாகவும் கருதப்படும் டம்பாச்சாரி 150 ஆண்டுகளுக்கு முன்பான தமிழ்ச் சமூகம் சந்தித்த அவலங்களை அப்பட்டமாக தோலுரித்தது. அதன் தாக்கம் முக்கால் நூற்றாண்டு நீடித்தது. டம்பாச்சாரியும், ரத்தக் கண்ணீரும் காட்டும் சமூக நிகழ்வுகள் இன்றும் தொடர்கின்றன; எம்.ஆர்.ராதா நடித்து புகழ்பெற்ற ரத்தக் கண்ணீர் நாடகமும், திரைப்படமும் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த திரைப்படம் வெளியான பிறகும் ஊர்தோறும் ரத்தக் கண்ணீர் நாடகத்தை சுமார் கால் நூற்றாண்டுகள் நடத்தியிருப்பார் எம்.ஆர்.ராதா! ரத்தக் கண்ணீர் நாடகத்தை எழுதியது திருவாருர் தங்கராசு. இவர் ...