எத்தனையோ கட்சிகளை பிளந்த பாஜக, பாமகவில் தந்தையும், மகனையும் பிரித்து, பிளவுவாத அரசியலில் ஒரு பிரளயத்தையே உருவாக்கி உள்ளது. சாணக்கியன் காட்டிய துரோக அரசியல் சரித்திரத்தில் துகில் உரியப்பட்டது தந்தையின் தியாகம்..! சோரம் போனது மகனின் வீரம்! என்னவாகும் பாமக..? இப்படியும் கூட நடக்குமா, நாட்டில்? மகனிடமிருந்து அப்பாவின் உயிரை பாதுகாக்க போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாம் தைலாபுரத்தில்! அப்பாவின் உயிரை பாதுகாக்கவே போலீஸ் வேண்டும் என்றால், அந்த மகன் எவ்வளவு ஆபத்தானவராக இருப்பார்…? இவரிடம் இருந்து வன்னிய சமூகத்தை பாதுகாக்கப் போவது யார்? இதைவிட ...