ஆட்சி கையில் இருக்கிறது, செயல்படுத்தும் அதிகாரமும் இருக்கிறது அமலாக்கத் துறை கண்டெடுத்த ஆதாரங்கள் இருக்கிறது. நடவடிக்கை பாயாமல், போராட்டங்கள் நடத்தி, திசை திருப்புவானேன், பாஜகவினர்..? 2 லட்சம் கோடி ஊழலை வெறும் 1,000 கோடி என்று சுருக்கிக் காட்டுவதேன்…? என்ன தான் டீலிங்..? டாஸ்மாக்கிற்கு எதிரான பாஜகவின் போராட்டங்கள், ஆவேசப் பேச்சுக்கள்..எல்லாம் தூள் கிளப்புகிறது..! இது எல்லாமே எனக்கு 2015, 2016 காலகட்டத்தில் மதுவை எதிர்த்து பேசி பல போராட்டங்களை முன்னெடுத்த திமுகவை நினைவுபடுத்துகிறது. அன்றைக்கு இதைவிட வீரியமாகவே மதுவை எதிர்த்து போராடி ஒரு ...