நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு இமாலய ஊழல்…! மத்திய அமலாக்கத்துறை இக விரிவான ரெய்டு நடத்தி அனைத்து விபரங்களையும் எடுத்துள்ளது..! உண்மைகள் வெளி வருமா? அல்லது ஊமையாக கடந்து போகுமா? சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கபடுவார்களா? அல்லது சமரசம் கண்டு கிடைத்ததை பங்கு போட்டுக் கொள்வார்களா..? மிதமிஞ்சிய மதுபான புழக்கத்தால் நாடும், மக்களும் நாசமாகி வருகின்றனர். குடும்பங்களில் வன்முறை, வளரும் குழந்தைகளின் மனநிலை பிறழ்வுகள், கொலைகள், பெண்கள் பாலியல் பலாத்காரம், சாலை விபத்துக்கள்.. ஆகியவை அதிகரித்து வருகின்றன. ஆனால், பல்லாண்டுகளாக மது விற்பனை லாபத்தில் சுகம் கண்டு ...