மது பாட்டிலுக்கு ரூ 10 அதிகமாக வாங்கப்படுவது குறித்து செந்தில் பாலாஜி அசத்தலான விளக்கம் அளித்தார். என்ன ஒரு நிதானம்! தெளிவு, அருமையான விளக்கம்…!  வாவ்! பெரிய திறமைசாலி. ஆனால், அவர் எப்படி உண்மையை ஊமையாக்கப் பார்க்கிறார், முறைகேடுகளை முறைப்படுத்தி திறம்பட நிர்வகிக்கிறார்…என ஆதாரங்களோடு பார்ப்போம்; அதாவது 10 ரூபாய் அதிகமாக வசூலிப்பது அதிமுக ஆட்சியிலும் இருந்தது, தற்போதும் உள்ளது. அப்போதும் அந்தப் புகார்களுக்கு  அபராதம் வசூலிக்கப்பட்டது. தற்போதும்  அந்தப் புகார்களுக்கு அபராதம் வசூலிக்கப்படுகிறது. ..என துல்லியமான கணக்கை முன் வைத்துள்ளார், செந்தில் பாலாஜி, ...