தமிழ்நாட்டரசின் நிர்வாகம் ஒரு ஸ்திரத் தன்மையின்றி, குழப்ப நிலையிலேயே ஸ்தம்பித்து கிடப்பதை நிர்வாகத்தின் பல மட்டங்களில் பார்க்க முடிகிறது. ஆட்சித் தலைமையில் இருப்பவர் சுயமாக முடிவெடுக்க முடியாதவராக ஆகும் போது, அதிகாரிகள் எப்படி அவர் கண்களைக் கட்டிவிட்டு கண்ணாமூச்சி விளையாடுவார்கள் என்பதற்கு தமிழகமே சாட்சியாகும்; தமிழகத்தின் மிக முக்கிய பதவியான டிஜிபி நியமனத்தில் ஒரு முடிவை எட்ட முடியாமல் உச்சநீதிமன்றத்தின் கண்டணத்தை பெற்றும் கவலையின்றி, காலம் கடத்துகின்றது ஸ்டாலின் அரசு. தமிழகத்தின் புதிய காவல் தலைமை இயக்குனர் பதவிக்கு தகுதி வாய்ந்த உயரதிகாரியைத் தேர்வு ...













