முன்னெப்போதும் இல்லாத வகையில் பெருந்திரளான ஆசிரியர் சமூகத்திடம் ஒரு அச்ச உணர்வும், ஆற்றாமையும், நிராதரவாக நிற்கும் மனநிலையும் தென்படுகிறது. சுமார் ஒன்றரை லட்சம் ஆசிரியர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி  உள்ள – தர்மத்திற்கே தலை குனிவை தரும் – ஒரவஞ்சனையான இந்த தேர்வின் பின்னுள்ள சூழ்ச்சிகள் குறித்த ஒரு அலசல்; தமிழ்நாட்டில் அரசு பள்ளி ஆசிரியர்கள் சுமார் ஒன்றரை லட்சம் பேரின் வாழ்க்கையை ஊசலாட்டதிற்கு தள்ளிவிட்டது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பு. ஆசிரியராகப் பணியில் தொடரவும், பதவி உயர்வு பெறவும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET )  ...