அரசு நிர்வாகத்தையே கிரிமினல் மயமாக்கிக் கொண்டுள்ளனர் மத்திய ஆட்சியாளர்கள்! நீதிமன்றங்களுக்கு நிர்பந்தம் தருகிறார்கள்! தேர்தல் கமிஷனை திருட்டு கமிஷனாக்கிவிட்டனர். காவல் துறைக்குள் மதவெறி உணர்வை புகுத்தி வருகின்றனர். பொறுத்துப் பார்த்த இளம் தலைமுறை பொங்கி எழுந்துவிட்டது! அடக்குமுறைகளை கையாண்ட பாஜக அரசு அரண்டு போயுள்ளது; சுதந்திர இந்தியா தற்போது பிற்போக்கு சக்திகளின் கையில் பிணைக் கைதியாக உள்ளது! ‘தேர்தலை நேர்மையாக எதிர்கொள்ளமாட்டோம். எங்களை ஆதரிக்காதவர்களை எல்லாம் வாக்காளர்கள் லிஸ்டில் இருந்து வெளியேற்றுவோம்’ என்றால் எப்படி? தேர்தல் கமிஷனரை தேர்ந்தெடுக்கும் குழுவில் இருந்து நீதிபதியையே நீக்கியது ...