400 படங்களுக்கு மேல் நடித்து நவரசங்களையும் வெளிப்படுத்தியவர் டெல்லி கணேஷ்! இவர் கடந்து வந்த பாதைகள், முன்னணி இயக்குனர்கள், ஸ்டார் நடிகர்களுடனான கலையுலகச் சாதனைகள், அரை நூற்றாண்டுக்கும் மேலாக நாடகங்களிலும், திரையிலுமான கலைப் பயணங்கள் குறித்த ஒரு பார்வை; இயக்குனர் கே.பாலச்சந்தர், காத்தாடி ராமமூர்த்தி குழுவினர் போட்ட பட்டினப்பிரவேசம் நாடகம் மிகவும் பிடித்துப் போய் அதைத் திரைப்படமாக்கும் முயற்சியில் இறங்கினார். கிராமத்திலிருந்து சொத்துக்களை விற்றுவிட்டு நகரத்துக்குக் குடிபெயர்ந்த குடும்பத்தினர் படும் கஷ்டங்களை சிந்தனையைத் தூண்டும் விதமாக விசு எழுதிய நாடகம் அது. ஸ்டுடியோவை விட்டு ...