டேலர் ஸ்விப்டை  (36) அமெரிக்க பாப் பாடகி என்பதை விடவும் அகில உலக பாடகி எனலாம். ஸ்விப்டின் தாக்கமும், செல்வாக்கும் பிரமிக்கத்தக்கது. இவரது இசை நிகழ்சிக்கு லட்சக்கணக்கில் திரளும் ரசிகர்களும், வசூலாகும் கோடிகளும் புதிய சாதனையை எட்டியுள்ள இந்த டிஜிட்டல் யுகத்தில் சைபர் தாக்குதலில் இருந்து தன்னை தற்காக்கும் உத்திகள் வியப்பில் ஆழ்த்துகின்றன; 20 ஆண்டுகளாக இசை உலகை கலக்கி வரும் டேலர் ஸ்விபிடின் செல்வாக்கு, இன்ஸ்டாவிலும் டிக்டாக்கிலும், கோலோச்சும் நவீன  பிரபலங்களை எல்லாம் பின்னுக்கு தள்ளும் அளவுக்கு  இருக்கிறது! பல முன்னணி பாப் ...