“நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட தகவல் அறியும் உரிமை சட்டமானது ஒரு உயிர்ப்பற்ற காகிதமாக மாறி வருகிறது” –என உச்ச நீதிமன்றமே கவலைப்பட்டுள்ளது. ‘ஆர்.டி.ஐ என்றாலே தற்போதைய ஆட்சியாளர்களுக்கு ஏன் இவ்வளவு அலர்ஜியாக இருக்கிறது’ என இந்த விரிவான ஆய்வு தோலுரித்துக் காட்டுகிறது; நாட்டு மக்கள் அர்த்தமுள்ள வகையில் மக்களாட்சியில் பங்கேற்கவும், அரசாங்கங்கத்தின் தவறுகளை சுட்டிக் காட்டி பொறுப்புடன் வழி நடத்தவுமான அதிகாரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டம் மக்களுக்கு அளித்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் அமல்படுத்தப்பட்டு பத்தொன்பது ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இதை ஒட்டுமொத்தமாக ...