கோவிஷீட்டு உற்பத்தியை நிறுத்தி விடுவதாக ‘ஆஸ்டராஜென்கா’ நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.கொரோனாவிற்கு பிறகு இளவயது மரணங்கள் உலகெங்கும் அதிகரித்து, இங்கிலாந்து, இந்திய நீதிமன்றங்களில் தடுப்பூசியின் பாதிப்பு வழக்குகள் குவிந்ததன் பின்னணியில் இந்த விவகாரத்தை அலச வேண்டும்; சமீப காலமாக – கொரோனா தடுப்பூசிக்கு பிறகு – இளம் வயது மரணங்களை அதிகம் பார்க்கிறோம். நல்ல ஆரோக்கிய நிலையில் இருக்கும் இளையோர் மாரடைப்பிலும், சுவாசம் திணறியும் இறக்கும் போது இதயம் ரணமாகிறது. கொரோனா மற்றும் தடுப்பூசியால் உயிரிழந்தோர் குறித்த தரவுகளை ஆரம்பத்தில் இருந்தே தவிர்த்துவிட்டது அரசாங்கம். ஆகவே, எவ்வளவு ...