திராவிட இயக்க சித்தாந்தத்தை கரைத்து குடித்தவர், சமூக நீதி குறித்த உரைவீச்சை மெய் சிலிர்க்க பேசுபவர்! மெத்த படித்தவர், ஒரு ஆசிரியரின் மகனாக எளிய குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர்! ஆனால், ஆட்சி அதிகாரம் அவரை நிறைவடையவே இயலாத செல்வத் தேடலில் பொருளாதார குற்றவாளியாக்கியது; செஞ்சி ராமச்சந்திரன் இவரை பட்டைதீட்டி இளம் தலைவராக கட்சித் தலைமைக்கு அடையாளம் காட்டினார்! ஆனால், கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக விழுப்புரம் மாவட்ட திமுகவை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு புதிய இளம் தலைமுறையில் யாரும் மேலேழுந்து வர முடியாமல் ...