காவேரி, கபினி, கிருஷ்ணா, துங்கபத்திரா.. என பத்து பெரிய நதிகள் பாயும் கர்நாடகாவின் பெங்களுரில் தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடுகிறதாம்..! ஒற்றை ஜீவநதியான காவேரியை நம்பி இருக்கும் நாமோ, ஆபத்தை அறியாமல் அமைதி காக்கிறோம். உண்மையில் கள நிலவரம் என்ன..? விளக்குகிறார் பொறிஞர் அ.வீரப்பன்; கடந்த மூன்று மாதங்களாகவே (சனவரி,பிப்ரவரி & மார்ச் 2024) செய்தி இதழ்களிலும் தொலை காட்சிகளிலும் பெங்களூரு மாநகரில் – கர்நாடகாவில் இந்த ஆண்டு (2024) பருவ மழை மிகக் குறைவாகப் பெய்தமையால் – மக்களுக்குக் குடிநீர் வழங்குவதில் கடும் ...