இசைத் துறையில் இணையற்ற சாதனையாளராக இளையராஜா போற்றப்படுகிறார். இசைத்துறையில் ஒரு மகத்தான ஆளுமையே இளையராஜா. ஆனால், அவர் மட்டுமே சாதனையாளரல்ல! அத்துடன் அவரது சாதனைக்கு அடித்தளமிட்ட இசைமேதைகள் பற்பலர். அந்த குருமார்களை நினைவு கூர்வதும் ஒர் கடமையல்லவா?: இளையராஜா பண்ணைபுரம் என்ற கிராமத்தில் பிறந்து, வறுமையின் காரணமாக எட்டாம் வகுப்போடு படிப்பை நிறுத்திக் கொண்டவர். ஆனால், அவர் ஒரு கற்பூர புத்தி கொண்டவர். அதனால் தன்னைச் சுற்றிலும் உள்ள கிராமத்து மக்களிடமிருந்தும், தன் காலத்திய இசை மேதைகளிடமிருந்தும் வெளிப்பட்ட இசையை அவர் மிகச் சிறப்பாக ...