பாஜகவின் வளர்ச்சி சமீப காலமாக வேகமெடுத்துள்ளது தமிழ் நாட்டில்! ஒன்பது தொகுதிகளில் அதிமுகவை முந்தி, இரண்டாம் இடம் பெற்றுள்ளது. நோட்டாவுக்கும் கீழே ஓட்டுகள் பெற்ற பாஜக தற்போது லட்சங்களில் ஒட்டு பெறும் நிலைக்கு உயர்ந்துள்ளதன் பின்னணியை ஆதியோடந்தமாக ஆய்வு செய்கிறது இந்தக் கட்டுரை; தமிழகத்தில் பாஜகவின் வாக்கு வங்கி 11.24% ஆகியுள்ளதெனினும், சில கூட்டாளிகளின் வாக்குகளை கழித்துப் பார்த்தால், 9 % மாகிறது என்பதே உண்மை. பாமகவைத் தவிர்த்து பார்த்தால், மிக பலவீனமானதே பாஜக. பாமகவும் சமீப காலமாக மிகவும் பலவீனப்பட்டே உள்ளது. இந்த ...