ஒரு சுண்டைக்கா நாடான இலங்கை தன்னைவிட நூறு மடங்கு பெரிய இந்திய தேசத்தின் மீனவர்களை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வருகிறது! தமிழ்நாட்டின் நிலப்பரப்போடு ஒப்பிட்டால், இதன் மூன்றில் ஒரு பங்குள்ள இலங்கைக்கு தமிழக மீனவர்களை வேட்டையாடி, இஷ்டத்திற்கு தண்டிக்கும் துணிச்சல் எப்படி வருகிறது..? இந்திய- இலங்கை மீனவர் பிரச்சினை என்பது என்ன தீர்க்கப்படவே முடியாததா என்ன? உட்கார்ந்து  மனம் விட்டு பேசினால் தீர்க்க முடியாத பிரச்சினை என்று எதுவுமே இல்லை. ஆனால், இதை தீர்த்து வைக்கும் எண்ணம் மத்தியில் ஆட்சிக்கு வருபவர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. தமிழ் ...