தமிழ்நாட்டில் கோவில் குட முழுக்குகளை சமஸ்கிருதத்துடன் தமிழ் மந்திரங்களும் சேர்ந்து நடத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் சென்ற ஆண்டு தீர்ப்பளித்தும் இன்று வரை திமுக அரசால் ஏனோ நடைமுறைப்படுத்த முடியவில்லை! தமிழக அரசு தொடர்ந்து சமஸ்கிருதத்தில் மட்டுமே நடத்துவதின் பின்னணி என்ன? 2020 ஆம் ஆண்டு தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கு நடந்த போது சமஸ்கிருதத்துடன் தமிழையும் சேர்த்து நடத்த தெய்வத் தமிழ் பேரவை, இந்து வேத மறுமலர்ச்சி இயக்கம் போன்ற அமைப்புகள் வலிமையாக வலியுறுத்தி ஒரளவு வெற்றியும் கிடைத்தது. பிறகு, ‘கரூர் பசுபதி ...