கவலையளிக்கிறது தமிழக நிதி நிலைமை! நாட்டை குறித்த அக்கறையின்றி, ஓட்டை குறி வைத்தே பட்ஜெட்கள் போடப்பட்டுள்ளன. தமிழகத்தின் இன்றியமையாத தேவைகள்.. என்னவென்று இன்னும் புரிந்து கொள்ளாத நிலையிலேயே, தன் ஆட்சி காலத்தை கடக்கவுள்ளது இந்த அரசு; தமிழகத்தின் சொந்த வரி மற்றும் வரி இல்லாத வருவாய் சுமார் 2.50 லட்சம் கோடியாக உள்ளது. ஆனால், இதில் கடனுக்கான வட்டியைக் கட்டவே 70,754 கோடிகள் செலவாகின்றன. இலவசங்கள், மானியங்கள் என்பதாக ஓட்டு வேட்டை அரசியல் நோக்கங்களுக்கு 1,53,724 கோடிகள் அளவுக்கு அள்ளி இறைக்கபட்டு செலவான பிறகு ...