இடதுசாரி சிந்தனையாளர் என்றால், வறட்டுத்தனமானவரல்ல, மக்கள் படைபாளி என்பதற்கு தருண் மஜும்தாரே உதாரணம். அழகியலோடு, எளிய கிராமத்து மக்களின் அச்சு அசலான கள்ளங் கபடமற்ற வாழ்க்கையை திரையில் பிரதிபலித்தார். கமர்சியல் கச்சடாக்கள் இல்லாமலே அவரது படங்கள் வெற்றி பெற்றன! தருண் மஜும்தார், ‘ஆர்ட்-ஹவுஸ்’ சினிமாவின் அழகியலை வெகு லாவகமாக வெகுஜன மக்களுக்கான சினிமாவுடன் கலந்து, கலையை கலைக்காக மட்டுமின்றி வெகுஜன மக்களுக்காகவும், அதே சமயத்தில் கலைப் படங்களை மட்டுமே ரசிக்கும் கடினமான பார்வையாளர்களை கவரக் கூடிய திரைப்படங்களை உருவாக்கியதற்காகவும், இந்திய சினிமாவில்,  ஒரு தனித்துவமான ...