அடுத்தடுத்து என 44 மனித உயிர்கள் பலியாகியுள்ளன! பல லட்சம் குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கின்றன! தமிழக சட்டசபை ஒருமித்து நிறைவேற்றிய ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்யும் மசோதாவை மீண்டும் திருப்பி அனுப்பியுள்ளார் ஆளுநர் ரவி. ”இது அரசமைப்புச் சட்டப்படி சரியான செயல் தானா..?” என அலசுகிறார் ஹரிபரந்தாமன். பத்திரிகைகளில் காணும் தகவல்களின்படி, ஆளுநர் மசோதாவை திருப்பி அனுப்புவதற்கு கூறும் மையமான காரணம், ‘இந்த மசோதா சட்டமானால், இது ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை நடத்தும் முதலாளிகளின் தொழில் செய்யும் அடிப்படை உரிமையை ...