கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம் ஒரு கொடுமை என்றால், அதற்கு பிறகு நடந்த கலவரத்தை காரணமாக்கி காவல்துறை போடும் கணக்கு வேறு மாதிரியாக உள்ளது. கலவரத்திற்கு முற்றிலும் சம்பந்தமில்லாத பட்டதாரி இளைஞர்கள் முதல் பாமரக் கூலிகள் வரை சுற்றி வளைத்து  தலித்துகள் கைது! இதன் பின்னணி என்ன? கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக ஆங்கில இந்து பத்திரிகையில் அந்த பள்ளிக் கூடத்தை அதிகம் தாக்கியது ஆதி திராவிடர்கள் எனவும், ஆகவே, இது கவுண்டர் – தலித் சாதி மோதலாக வடிவம் கொள்ளும் என்றும் உளவுத் துறை ...