தலைமை நீதிபதி தாக்கப்படப் போகிறார் என்பதற்கு கட்டியம் கூறுவது போல சனாதன வெறியர்கள் சமூக ஊடகங்களில் வன்மத்தை தொடர்ந்து விதைத்தனர். அதை ஆட்சியாளர்கள்  ரகசியமாக ரசித்தனர். அவர் செருப்பு வீசித் தாக்கப்பட்ட பின்னரும் தாக்கியவரை சம்பிராதாயமாக விசாரித்து உடனே விடுவித்தனர். இதன் பின்னுள்ள அரசியல் என்ன? அக்டோபர் 6 ஆம் தேதி திங்கள்கிழமை உச்ச நீதிமன்றத்தில் தலமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது மயூர் விகாரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் என்பவர் செருப்பை வீசி தாக்கினார். ஆனால், அது குறி தவறி அவரது அருகில் ...