எந்தக் கட்சியில் ஒரு காலத்தில் தியாகிகளும், பிறருக்காக வாழும் உத்தமர்களும் அதிகமாக இருந்தார்களோ, அந்த கம்யூனிஸ்ட் கட்சி இன்று எப்படிப்பட்ட அதி மோசமான நிலைக்கு சென்றுள்ளது என்பதற்கு, தளி சட்டமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளரே சாட்சியாகும்; தளி என்பது தமிழ்நாட்டின் எல்லையில் கர்நாடகாவை ஒட்டியுள்ள மலைகள் சூழ்ந்த வனப்பகுதியைக் கொண்ட பகுதியாகும். இங்கு தெலுங்கு ,கன்னடம், தமிழ் என மும்மொழி பேசும் மக்களும் கணிசமாக வாழ்கின்றனர். பெரும்பாலும் எளிய விவசாய மக்களே. இங்கு தான் கடந்த கால் நூற்றாண்டாக கட்டுக்கடங்காத ...


















