சமூகநீதியைக் குறித்து பெரிதாக தம்பட்டம் அடித்தவரில்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கானவராகத் தன்னை பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டவருமில்லை. வெற்றுப் பேச்சாலோ, எழுத்தாலோ ஒரு மாய பிம்பத்தை கட்டமைக்காமல், விஜய் தன் செயல் வழியே வெளிப்பட்டு வருகிறார். தவெக அமைச்சரவை ஒரு அலசல்; தவெக ஆட்சியின் அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடந்துள்ளது. இதில் தலித்துகள் மற்றும் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அத்துடன் ”கூட்டணிக் கட்சிகளுக்கு அதிகார பகிர்வு தருவோம்” என விஜய் கட்சி தொடங்கிய உடனே நடந்த விக்கிரவாண்டி கூட்டத்தில் சொன்னது இன்று நிஜமாகி வருகிறது. குறிப்பாக ...
















