களத்தில் திமுக, அதிமுக வேட்பாளர்களுக்கு இருக்கும் பல சாதகமான அம்சங்கள் த.வெ.க வேட்பாளர்களுக்கு இல்லை என்பது ஒருபுறமிருக்க, இத்துடன் தலைமையின் ஒத்துழைப்போ, வழிகாட்டலோ.. எதுவுமில்லாமலும், சில உள்ளுர் நிர்வாகிகள் எதிரணியினருக்கு விலை போய் விட்டதாலும்  தவெக வேட்பாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் சொல்லி மாளாது; தமிழக தேர்தல் களத்தில் அரசியல் கட்சிகளின் பிரச்சாரங்கள் அதி வேகம் எடுத்துள்ளது. த.வெ.க தலைவர் விஜய்க்கு செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் மாபெரும் வரவேற்பு தருகிறார்கள். அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தும் வண்ணம் வரலாறு காணாத கூட்டத்தை விஜய் பரப்புரையில் பார்க்க ...