காங்கிரசின் தொடர் மெளனத்தாலும், த.வெகவுடன் ரகசியமாக பேசி வருவதாலும் திமுகவில் கோபம் நிலவுகிறது. காங்கிரஸ் த.வெ.க பக்கம் போனாலும் பரவாயில்லை ராமதாசின் பாமகவையும், தேமுதிகவையும் உள்ளே இழுத்து சரிகட்டிவிடலாம் என்ற பேச்சு திமுகவில் ஓடுகிறது. இதன் வெளிப்பாடே மதுரையில் கோ. தளபதியின் பேச்சு யாருடன் கூட்டு என்பது குறித்து எல்லோரிடமும் கேட்டும் இன்னும் அறிவிக்காமல் இருக்கிறது காங்கிரஸ்! திமுக கூட்டணியில் இருந்து விலகி, த.வெ.கவுடன் கைகோர்ப்பது குறித்து காங்கிரசுக்குள் இரு வேறு கருத்துக்கள் உள்ளன. நீண்ட காலம் திமுகவோடு பயணித்த நட்பு காரணமாகவும், அந்த ...












