தேவபூமி எனப்படும் உத்தரகாண்ட் மாநிலத்தில் பத்ரிநாத், கேதர் நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி எனும் நான்கு கோவில்களின் உறைவிடமான  ஆன்மீக பூமியை வன்மமும், வெறுப்பும் மிகுந்த நரகமாக மாற்றி வருகின்றனர் பாஜகவினர் என்பதற்கு அதிர்ச்சி தரும் இந்த சம்பவமே சாட்சியாகும்; உத்தராகாண்ட் மாநில தலைநகரான, டேராடூனில் ஜுலை 14 அன்று கிறித்துவர்களின் வழி பாட்டுத்தலமான ஒரு சிறிய தேவாலய இல்லத்தில், முப்பதுக்கும் மேற்பட்ட இந்து மத தீவிரவாதிகள்  புகுந்து அங்கிருந்தோரை தாக்கி, காயப்படுத்தி அங்கிருந்த பொருட்களையும் உடைத்து நொறுக்கி நாசப்படுத்தியுள்ளனர். டேராடூனின் நேரு காலனியில் ...

அதிகாரத்தின் ஆதரவு இருந்தால் எத்தனை கொலையும் செய்யலாம்! எவ்வளவு வன்முறையிலும் இறங்கலாம், ஜாமீனில் வந்து விடலாம் என்ற நம்பிக்கையே  தாக்குதலுக்கு அடித்தளமாகும்! இவர்களின் குற்றப் பின்னணியைப் பார்த்தால் அதிபயங்கரமானது. திமுக அரசு, தன் திசை வழியை மாற்றிக் கொள்ளுமா? கனியாமுத்தூர் சக்தி மெட்டிரிகுலேஷன் பள்ளி  நிர்வாகி ரவி எப்படிப்பட்ட வன்முறையாளர் என்பது தற்போது மீண்டும் நிருபணமாகியுள்ளது! அவர் மீது மட்டுமல்ல, அவர் மனைவி மீதும் கொலை வழக்கு நடந்து கொண்டுள்ள நிலையில் – ஜாமீனில் வெளி வந்த நிலையில் – தனது தம்பி சுபாஷையும், ...