இப்படியும் நடக்குமா? நடந்து இருக்கிறதே..! தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு அனுப்பியுள்ள  அதிகாரபூர்வ கடிதத்தில்  – அதாவது அதன் லெட்டர் பேடில் -பாஜக முத்திரை இருப்பது அதிர்ச்சியை மட்டுமல்ல, பாஜகவும் தேர்தல் கமிஷனும் வேறு, வேறல்ல என்பதற்கு அத்தாட்சியாகவும் மாறிவிட்டது. முழு விபரமாவது; இந்த பாவச் செயலுக்கு  அதிகாரப்பூர்வ விளக்கம் ஒன்றை வெளியிட்ட தேர்தல் ஆணையம், ”இது ஒன்னுமில்லைங்க நம்ம அலுவலகத்தில்  உள்ள எழுத்தர் ஒருவர் செய்த ஒரு பிழை தான். அவரை வேலையில் இருந்து தூக்கிட்டோம். வேட்பாளர்களின் குற்றப் பின்னணிகளை வெளியிடுவது தொடர்பான ...